Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா கிட்ட தான் செலவுக்கு காசு வாங்குரே…. பாய்ஸ் பட நடிகரின் உருக்கமான பேட்டி….!!!

பாய்ஸ் பட நடிகர் மணிகண்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

முன்னணி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் மூலம் சித்தார்த், பரத், மணிகண்டன், தமன் ஆகியோர் அறிமுகம் ஆகி இருந்தனர். இந்நிலையில் 40 வயது ஆகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய இருக்கும் பாய்ஸ் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, பாய்ஸ் திரைப்படத்திற்குப் பின் நான் நடித்த எந்த திரைப்படமும் ஓடவில்லை.

அதனால் நானே கதை எழுதி படங்களை இயக்க நினைத்தேன். அப்படி நான் உருவாக்கிய கதையை பரத் மற்றும் நகுலிடம் கூறியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் என்னால் அந்தப் படத்தை இயக்க முடியவில்லை.

மேலும் சில வருடங்களுக்கு முன் எனக்கு மது பழக்கமும் இருந்தது. இப்போது நான் செலவுக்கு என் அம்மாவிடம் காசு வாங்கி வருகிறேன். இருப்பினும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். பாய்ஸ் மணிகண்டன் தற்போது பிரபுதேவா நடித்து வரும் பகிரா திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |