திருமணம் முடிந்த கையோடு புதுமணத் ஜோடிகள் செய்த காரியம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையின் ரத்தம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தையின் ரத்த வகையில் உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய முன்வராததால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் புதுமண ஜோடி ஒன்று திருமணம் முடிந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்துள்ளனர். இதனால் குழந்தைக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை உத்தரபிரதேச காவலர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் தக்க சமயத்தில் ரத்த தானம் செய்து சிறுமியின் உடலை காப்பாற்றிய புதுமண ஜோடி பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.