Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோடியால் பாராட்டப் பெற்ற சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்..!!

பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் திரு மோகன் மீது காவல்நிலையத்தில் கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற சலூன் கடை உரிமையாளர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தை  பயன்படுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியமைக்காக பிரதமர் மோடியால் மன்கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டு பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் உட்பிரிவில் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னிலையில் பாஜக நிர்வாகியான மோகனிடம் மதுரை அன்பழகன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜன் என்பவர் கந்துவட்டி புகார் அளித்துள்ளார். கந்துவட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |