இந்தியா முழுவதும் ரத்த வெள்ளத்த்தை ஓட வைக்க கலவரத்திற்கு விதை விதைத்துக் கொண்டு இருக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக அரசியல் காட்சிகள் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கினர். இன்று மாலை 6 மணியோடு வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கதிர் ஆனந்த்_க்கு ஆதரவாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் கூட்டணி கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் , விசிக , மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் தலைவர்கள் பங்கேற்ற்று வேலூர் மக்களவை வேட்பாளர் கதிர் ஆனந்த்_க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் ,காஷ்மீரில் பதற்றம் அமர்நாத் யாத்திரைக்கு வந்த அனைவரும் ஊர் திரும்பட்டும் , காஷ்மீர் மாநிலத்தை விட்டு லட்சக்கணக்கானவர்கள் வெளியேறட்டும் என்று கவர்னர்உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
காஷ்மீர் முஸ்லிம்கள் எங்கே போவது.90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்களே . இந்தியா முழுவதும் ரத்த வெள்ளத்தில் ஓட வைக்கின்ற இந்து-முஸ்லிம் கலவரத்திற்கு விதை விதைத்துக் கொண்டுஇருக்கும் மோடி அரசுக்கு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும். தமிழகத்தினுடைய உரிமை அனைத்தும் பறிபோய்விட்டன என்று வைகோ பேசினார்.