Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ்ஸின் தவறை சரி செய்யவே 5 ஆண்டுகள்” பிரச்சார கூட்டத்தில் மோடி விமர்சனம் ….!!

காங்கிரஸ்ஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரிசெய்வதற்கே 5 ஆண்டுகள் செலவழித்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ,  மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பரப்புரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தாம் வாக்குறுதி மக்களுக்கு அளித்த பணிகளை முடித்துவிட்டாக ஒருபோதும் கூறியதில்லை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறுகளை சரிசெய்வதற்கே கடந்த 5 ஆண்டுகளையும் செலவழிதேன் என்று கூறினார். பல முக்கிய பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும் , பாகிஸ்தானின் பாலாகோட் மீதான தாக்குதலை மக்கள் மறந்துவிட்டதாக பலரும் கூறி வருவதாகவும், ஆனால், அதை மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என்று மோடி பேசினார்.தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்கள் நிறைந்த ஆவணம், அந்த தேர்தல் அறிக்கை ஊழலுக்கு ஊக்கம் தருவதை போல அமைந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும் தேசதுரோக சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஏமாற்றுபவர்களின் பக்கம் இருப்பதாகவும் பிரதமர் மோடி சாடினார்.

Categories

Tech |