Categories
தேசிய செய்திகள்

சீனாவின் ஆக்கிரமிப்பு… “மோடியின் கோழைத்தனம் தான் காரணம்”… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!!

பிரதமர் மோடியின் கோழைத்தனம் தான் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு காரணம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “எல்லோரும் இந்திய ராணுவத்தின் துணிச்சல், திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். பிரதமருக்கு மட்டுமே நம்பிக்கை இல்லை. அவரது கோழைத்தனம்தான், நமது நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க காரணமானது. அவரது பொய்களால்தான் அதை சீனா தொடர்ந்து தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |