Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி : இன்று காலை 10.30 மணி முதல்….. பிரதமர் மோடி அறிவிப்பு….!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கும்  தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கட்டுப்பாட்டுடன் தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடித்த பின்பு தான் நிம்மதி என்ற மனநிலையில் மக்கள் இருந்தனர்.

இந்நிலையில் நீண்டநாள் எதிர்பார்ப்பிற்கு பலன் அளிக்கும் விதமாக, நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் நாளை 166 இடங்களில் 6 லட்ச  முன்களப்பணியாளர்களுக்கு  தடுப்பூசி போடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Categories

Tech |