Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தின் வில்லன் மோடி “உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு !!…

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை வில்லன் என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திண்டுக்கல்  மக்களவைதேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி அவர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டார் பிரச்சாரபயணத்தில் அவர் பேசியதாவது,

மோடி ஆட்சியில் பணம் மதிப்பிழப்பு நடவெடிக்கையின் பொழுது நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 100 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடினர். இதில் ஸ்னோளின் மாணவி உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து பாஜகவினர் ஆயிரம் பேரை பாதுகாக்க 13 பேரை கொல்வதில் தவறில்லை என்று கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தனக்கு செய்தி தெரியாது என மெத்தனப்போக்கில் கூறினார். இவர்கள் கூறிய பதில்களுக்கு நாம்நமது பதிலடியை    வருகிற 18-ந் தேதி திருப்பி கொடுப்போம். இதன் மூலம் மத்தியில் ராகுல்காந்தி பிரதமாகவும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் பதவி ஏற்கவழிவகை செய்வோம் என்று பேசினார்

மேலும் திமுக பதவி ஏற்ற மறுகணம்  விவசாய கடன், கல்விக்கடன், நகைக்கடன் போன்றவை ரத்து செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும். . நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திரைப்படங்களில் தான் வில்லன்கள், காமெடியன்கள் இருப்பார்கள். ஆனால் தமிழக மக்களை பொறுத்த வரையில் பிரதமர் மோடி வில்லனாக காட்சியளிக்கிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். மேலும் அனைத்து தமிழக அமைச்சர்களும் காமெடியன்களாக உள்ளனர். இவ்வாறுஅவர் பேசினார்

Categories

Tech |