தமிழ்நாட்டில் பரப்புரையை மேற்கொண்ட ராகுல் காந்தி,பிரதமர் மோடி தமிழில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பரப்புரையை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி இன்று திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது, எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் நான் தமிழக மக்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன்.
நானும் ஒரு தமிழன் தான். ஆனால், பிரதமர் மோடி தமிழில் பேசி தமிழக மக்களுக்கு அநீதி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெறுவதற்கு மோடி அரசே காரணம்.பெட்ரோல் டீசல் விலை உயர்வாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இளைஞர்கள் இளம் பெண்கள் ஆகியோர் வளமுடன் வாழ்வதற்கு நான் உதவிட வேண்டுமென்று உங்களை நேரடியாக சந்திக்கிறேன் என்று தெரிவித்தார்.