அயோத்தியில் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தனது உற்சாக உரையை நிகழ்த்தியுள்ளார் .
இந்தியாவில் இருக்கக்கூடிய பல இந்து மக்களுக்கும், பல இந்து அமைப்புகளுக்கும் மிகப்பெரிய கனவாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல வருடங்களாக இருந்து வருகிறது. பல வருட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நடத்தப்பட்ட அடிக்கல் நாட்டு விழாவில், இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி, தற்போது பொதுமக்களிடம் உற்சாகமாக உரை நிகழ்த்தியுள்ளார்.
அதன்படி,ஜெய் ஸ்ரீராம் என முதலில் கூறிவிட்டு நாட்டு மக்களிடம் உரையைத் தொடங்கினார். சுதந்திரப் போராட்டம் போன்று ராமர் கோவில் கட்டவும் பலர் போராடியுள்ளனர். அவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி. ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதால் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. தங்கமயமான அத்தியாயம் ஒன்று புதிதாக தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.