Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை…!!

தமிழ்நாடு உட்பட கொரோனா அதிகம் பாதித்த 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நிலையில், முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் உட்பட்ட  10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி மீண்டும் இன்று  காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தயிருக்கிறார். கொரோனா நோய் பரவலைத் தடுக்க மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கலந்துரையாடுகிறார்.

Categories

Tech |