2020ஆம் ஆண்டுக்கான பேஸ்புக்கின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 2020ம் ஆண்டுக்கான உலக தலைவர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலமான தலைவர்களின் பாலோவர்ஸ் மூலமாக பட்டியலிடப்படுகிறது. வெளியிட்ட பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். சுமார் 4.5 கோடி பாலோவர்ஸ் பிரதமர் மோடிக்கு ஃபேஸ்புக்கில் உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2.7 கோடி பாலோவர்ஸுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் 1.68 கோடி பாலோவர்ஸுடன் ஜோர்டான் அரசி ரானியா இருக்கின்றார். கடந்த பிப்ரவரி மாதம் முதலிடத்தில் இருந்த டிரம்ப் பின்னுக்கு தள்ளப்பட்டு மோடி முதலிடத்திற்கு வந்துள்ளார். அமெரிக்க அதிபர் இந்திய பயணத்தின் போது உலகின் இரு பிரபல தலைவர்கள் மேற்கொள்ள இருக்கும் சந்திப்பு பிரம்மாண்டமானது என்றும் வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.