தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து. அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர் அவற்றை போலீசார் அணைக்க முயன்ற போது கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் வருகிற 20-ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது மேலும் வீடுதிகளை விட்டு வெளியேறவும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது இதனை கண்டித்து மாணவர்கள் நள்ளிரவு ஒரு மணி வரை போராட்டம் செய்தனர்போராட்டம் நடத்தியதாக 44 மாணவிகள் உட்பட 75 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதிமுக விடுதலை சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய ஜனநாயக கட்சி என பல்வேறு கட்சியினர் தடையை மீறி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மோடி மற்றும் அமித் ஷா உருவ பொம்மைகளை எரிக்கமுயன்றதால் அங்கும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.