Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா – முதல்வர்களுடன் மோடி ஆலோசனை ….!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கின்றார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000க்கும் மேல் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகின்றார். பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்துகின்றார்.

Categories

Tech |