பிரித்தானிய மருத்துவ கண்காணிப்பு அமைப்பு 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகாரம் அளித்துள்ளது.
மாடர்னாவின் கொரோனா தடுப்பூசி 12 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போட அங்கீகாரம் வழங்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி ஆகும். மேலும் மருந்துகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பொருள்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) மாடர்னாவின் கொரோனா தடுப்பூசிக்கு இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழு (JCVI) ஸ்பைக்வாக்ஸ் எனப்படும் மாடர்னா தடுப்பூசியை குழந்தைகளுக்கும் செலுத்தலாம் என்பது குறித்த ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும். அந்த வகையில் JCVI-யிடம் அரசாங்கம் முறையான ஆலோசனையை கேட்டதாக சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.