அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், முதியவர்கள் மற்றும் எளிதில் தொற்று பாதிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த பரிந்துரை செய்திருக்கிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இந்த பரிந்துரைக்கு நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் இன்னும் சில நாட்களில் அனுமதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெள்ளை மாளிகை, வரும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசியளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனால், விரைவில் மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளனர். நாட்டில் தற்போது வரை சுமார் 3.7 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.