Categories
சினிமா தமிழ் சினிமா

மாடல் நடிகை மீரா மிதுன் அதிரடி கைது…. கத்திக் கூச்சலிட்டு அவரே வெளியிட்ட வீடியோ….!!!

போலீசார் கைது செய்ய வந்த போது நடிகை மீரா மிதுன் கத்தி கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பலரையும் கொச்சையாக பேசி வந்த மீரா மிதுன் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் இணைந்து பட்டியலின மக்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பலர் மீராமிதுன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாடல் நடிகை மீரா மீது போலீசார் கைது செய்ய வந்த போது என் மீது யாராவது கை வைத்தால் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்வேன் என்றும் கதறி கூச்சலிட்டு எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |