டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ப்ரீபெய்ட் கட்டணத்தை ஜியோ உயர்த்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது ஜியோ தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை டிசம்பர் 1ஆம் தேதி உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஜியோவை நம்பி இருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படி போட்டி போட்டு விலை ஏற்றினால் என்னதான் செய்வது என்று மக்கள் புலம்பி வருகின்றனர். ஒருபக்கம் மழையால் அவதிப்படும் மக்கள், மறுப்பக்கம் காய்கறிகளின் விலை உயர்வால் அவதியடைந்து வருகின்றனர். தற்போது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது மக்களுக்கு பெரும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.