Categories
மாநில செய்திகள்

MLA மகன்களின் டார்ச்சர்…மனமுடைந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் MLA வின் மகன்கள் இளைஞர் ஒருவரை துன்புறுத்தியதால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் MLA  விஷ்ணு ஸ்வரூப்பின்  மகன்களான சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் ஆகியோர் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.மேலும் கடைகளை வாடகைக்கு விட்டும் வருகின்றனர்.இந்நிலையில்,ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதற்காக  ராஜேஷ் சிங்  என்ற இளைஞர் 7,00,000 ரூபாயை முன்தொகையாக அளித்துள்ளார்.

Image result for ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இதையடுத்து பணம் கொடுக்கல்,வாங்கலில் ராஜேஷ் சிங்குக்கு சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் ஆகியோருடன்  தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகராறில்  சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் இருவரும் சேர்ந்து ராஜேஷ் சிங்கை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜேஷ் சிங் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர்  சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் ஆகிய இருவரின்  மீதும்  தற்கொலைக்கு தூண்டியதன் பேரில்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |