Categories
அரசியல்

காங்கிரஸிற்கு தகுந்த வார்டுகளை கொடுங்கள்…. மாவட்ட செயலாளர்களிடம் கூறிய ஸ்டாலின்…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரசுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் வார்டுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தம் இருக்கக்கூடிய 200 வார்டுகளில் 40 வார்டுகளை கேட்பதற்கு காங்கிரஸ் முடிவெடுத்தது.

அதற்காக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், தற்போதுவரை அவர்கள் கேட்ட அளவில் வார்டுகள் ஒதுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2014ம் வருடத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போன்று தற்போது ஒதுக்கி விடுவார்களோ என்று காங்கிரஸ் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உடனடியாக திமுக மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரசுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்க கூடிய விதத்தில் வார்டுகள் தரப்பட வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |