Categories
அரசியல்

“சூரிய கதிர்களை போல அவர் புகழ் நாடெங்கும் பரவியுள்ளது!”…. நேதாஜிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்…!!!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சூரியக்கதிர் போன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடு முழுக்க பரவி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு இன்று 125 ஆவது பிறந்த நாள். சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறார். சூரிய கதிர்களை போன்று அவரின் புகழ், நாடு முழுக்க பரவி இருக்கிறது. அவர் கொடுத்த ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |