Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்…. ஐ.நா எடுத்த முக்கிய தீர்மானம்…. வாக்கெடுப்பை புறக்கணித்த பிரபல நாடுகள்….!!

மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு 119 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது.

மியான்மர் நாட்டின் ராணுவம் அரசியல் தலைவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மியான்மர் நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் மீது இராணுவத்தினர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலானோர் பலியாகியுள்ளார்கள்.

இந்நிலையில் மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா பொது கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மியான்மர் ராணுவத்தினர்கள் கைது செய்து வைத்திருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மியான்மர் நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்துவதை மியான்மர் ராணுவம் நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஐ.நாவின் இந்த தீர்மானங்களுக்கு சுமார் 119 நாடுகள் வாக்களித்துள்ளது. ஆனால் மியான்மர் நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்து வரும் ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் ஐ.நாவின் மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது.

Categories

Tech |