மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் காரிய வெற்றிக்கு சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பு. வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் பலன் உண்டாகும். விஐபிக்கள் வீடு தேடி வரக்கூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கல்யாண முயற்சி கைகூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை ,புத்திசாலித்தனம் இவற்றால் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். இன்றைய நாள் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். மனமும் மகிழ்ச்சியாக காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். சமூகத்தில் இன்று உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.
இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் பின்தங்கிய நிலையை சந்திக்கக்கூடும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகரிப்பதால், கொஞ்சம் பாடத்தில் கவனத்தை செலுத்தி படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.