Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…ஆரோக்கியத்தில் கவனம் தேவை…ஆதாயம் அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று கோபத்தை கண்டிப்பாக நீங்கள் தவிர்த்துத்தான் ஆக வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு ஏற்படும். நம்பிக்கை கூடும். இன்று குழப்பங்கள் நீங்கி மனதில் நிம்மதி காண்பீர்கள். வியாபார வளர்ச்சியால் ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவார்கள். நண்பர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடிய சூழல் இருக்கும். தவறான உணவு வகைகளை உண்ணாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். ஆனால் வேலை செய்பவரிடம் கோபப்படாமல் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது ரொம்ப நல்லது.

இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் எப்போதும் போலவே பேச்சை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |