Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…பணம் தட்டுப்பாடு குறையும்…முன்கோபத்தை குறைக்கவும்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று தேவைக்கு அதிகமாகவே நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் வாக்கு வன்மையால் பலம் பெறுவீர்கள். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இப்போதைக்கு புதிய முயற்சிகள் தயவுசெய்து தள்ளிப்போடுங்கள். இப்பொழுது உள்ள வேலையை மட்டும் கவனித்து பாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலையில் எதுவாக இருந்தாலும் பொறுமை என்பது ரொம்ப முக்கியம். செலவைக் குறைப்பதன் மூலம் பணம் தட்டுப்பாடு குறையும். பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது ரொம்ப நல்லது. வாடிக்கையாளரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தை தயவு செய்து குறைத்து கொள்ளுங்கள். கூடுதலாக இன்று  உழைக்க வேண்டியிருக்கும். தனவரவு காலத் தாமதம்தான் வந்து சேரும்.

எந்த விதத்திலும் பிரச்சனை செய்து கொள்ளாமல் அமைதியாக இருப்பது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்வது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |