மிதுன ராசி அன்பர்களே…!! இன்று கனிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
அமோகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதில் உள்ள நல்லது கெட்டதை யோசித்து செய்வது நல்லது. அந்த விவகாரங்களில் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கல்வியில் கூடுதல் உழைத்து படிப்பது நல்லது.
படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.