Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

டீ குடிக்கதான் போனாங்க… அப்புறம் திரும்பி வரல… மாயமானவரை தேடும் பணியில் போலீஸ்…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்சேட். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் இவருக்கும் இவருடைய மகனான மீரானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்ததால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டீ குடிப்பதற்காக மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துள்ளார். அதன்பின் அவர் மருத்துவமனைக்கும் வரவில்லை. அவர் வீட்டிற்கும் சொல்லவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜாபர்சேட்டை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |