தாய்லாந்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கலந்து கொண்டார்.
மியன்மர்யை சேர்ந்த ஹான் லே (22) உளவியல் மாணவி ஒருவர் தாய்லாந்தில் நடைபெறும் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 என்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஹான்லே மியன்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ஜனநாயக முறையிலான ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதனை எதிர்த்து மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஹான் லே எங்கள் நாட்டு மக்களை அடக்கு முறை என்ற பெயரில் ராணுவ வீரர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக அனைவரும் ராணுவ வீரர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சாலைகளில் இறங்கி போராடி வருவதாக கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் மியான்மருக்கு உதவி தேவைப்படுவதாகவும் மியன்மாரை சிறந்த நாடாக உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020’ அழகி போட்டி அரங்கில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அப்பெண்ணின் பயமற்ற துணிச்சலான பேச்சு அங்கிருந்த அனைவரையும் மியான்மருக்கு ஆதரவு அளிக்குமாறு செய்தது.
அவருக்கு மியன்மர் மீதான நாட்டுப்பற்றை குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஹான்லே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மியன்மரில் உள்ள யாங்கூன் என்ற பெருநகரத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சாலையில் இறங்கி போராடிய இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.