Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டிங்களா…. திரண்டு வந்த வியாபாரிகள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…..!!

விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி சமூக இடைவெளி இன்றி இயங்கிவந்த மாட்டுச்சந்தையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தைகளுக்கு வாணியம்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும், அருகில் உள்ள ஆந்திர மாநிலம் பகுதியிலிருந்தும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் வந்து தங்கள் மாடுகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக மாட்டுச்சந்தை மறு உத்தரவு வரும்வரை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நகராட்சி அனுமதி அளிக்காமல் திடீரென்று மாட்டுச்சந்தை நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பைபாஸ் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவல்துறையினர் விரைந்து வந்து மாட்டுச்சந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வியாபாரிகளை கலைந்து போகும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர் .

Categories

Tech |