Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தகாத வார்த்தைகள் பேசிய தரகர்…. புகார் அளித்த அலுவலர்.‌‌… போலீஸ் நடவடிக்கை….!!

வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளரிடம் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்த தரகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மனோகரன் வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் அருள்மொழியை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தரகரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |