Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இலவசமாக வழங்க வேண்டும்” மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் …. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து சங்க கூட்டுக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பொறியாளர் சங்க நிர்வாகி ஆர்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகி நடராஜன், மைகேல் பிரான்சிஸ், பொறியாளர் சங்க மணிவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது, மின் மசோதா சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் எனவும், மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் பீர் முகமது ஷா, மாநில செயலாளர் எஸ்.வண்ணமுத்து மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் இசக்கி பாண்டி, அருள்ராஜ், சார்லஸ், தென்கரை மகாராஜன் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |