அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை படைக்க முயற்சி செய்த நபர்தோல்வியடைந்தார்.
அமெரிக்க நாட்டில் மின்னசொட்டா பகுதியைச் சேர்ந்தவர் கர்ட் ஆண்டர்சன் ( Kurt Anderson) . இவர் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை செய்ய முயன்றார். இதற்காக அவர் பிரத்யேகமான கார் ஒன்றையும் தயாரித்தார்.
இதையடுத்து விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தில் பனியால் உறைந்து போயிருக்கும் பியர் ஏரியில் தன்னுடைய சாதனைப் பயணத்தை ஆண்டர்சன் தொடங்கினார். அப்போது பனிப்பாதையில் மணிக்கு 380 கி. மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து சென்ற அந்த கார், அடுத்த சில நொடிகளிலேயே குட்டிக்கரணம் அடித்து குப்பிற கவிழ்ந்தது.
நல்ல வேளையாக இந்த விபத்தில் ஆண்டர்சன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஆனாலும் இவரால் முந்தைய சாதனையை முறியடிக்கமுடியவில்லை. ஆம், கடந்த 1981-ஆம் ஆண்டு சம்மி மில்லர் என்பவர் மணிக்கு 400 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்துள்ளார். அவரது சாதனையை ஆண்டர்சனால் முறியடிக்க முடியவில்லை. இருப்பினும் 380 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்றது பாராட்டக்கூடியது.
https://twitter.com/RT_com/status/1229752427194118144