Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி”… தமிழக வீரர் நடராஜன் டிவிட்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததில்பெரும் மகிழ்ச்சி அடைந்த தமிழக வீரர் நடராஜன் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாப்ப நாயக்கன் பட்டியில் ஏழ்மை நிலையில் நடராஜன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட   நடராஜன் நண்பர்களின் உதவியுடன் மாவட்ட மற்றும் மாநில அளவிலான வாய்ப்பினை பெற்று விளையாடி வந்துள்ளார். தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரனான நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

இதையடுத்து அவர் டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் விரும்பும் ஒரு வேலையை தேர்வு செய்யுங்கள், அப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையில் ஒரு நாளும் வேலை செய்ய வேண்டியதில்லை” என்று கூறி மீண்டும் அணி வீரர்களுடன் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வெற்றி வாகையை சூடுவேன் என்றும் நம்பிக்கையுடன்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |