மின்னல் தாக்கியதால் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் மகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது சொந்தப் பசுமாடுகளை மகேஸ்வரி வயலில் மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.
அதன்பின் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 பசு மாடுகள் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் 2 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் மற்றொரு பசுமாடு உயிருக்கு போராடி வருகின்றது.