தமிழகத்தில் கொள்ளை, திருட்டு, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலும் இந்த ஆபரேஷன் மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேட்டையில் பலர் பிடிபட்டுள்ளனர் மேலும் வேலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் மட்டும் இதுவரை 19 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 17 பேரிடமும் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதே போல் காட்பாடியில் ஆறு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியாத்தம் பகுதியில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் பிரமாண பத்திரமும் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இது போன்ற வேட்டை இனி அடிக்கடி நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆப்பரேசனில் 32 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.