மின்கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் மின் வாரிய அலுவலகத்தில் வயர் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருக்கும் மின் கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.