Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட அமைச்சர்கள்.!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக அமைச்சர்கள் அவரது  இல்லத்தில் வைத்து  நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கோரினர். 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இடைதேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் வைத்து அவரை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினர்.  இந்த சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்திடம் தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |