Categories
அரசியல் மாநில செய்திகள்

A.C சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் ….!!

வேலூர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , கே. பி அன்பழகன் , காமராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மக்கள் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளராக களமிறங்குகின்றார். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

Image result for A.C சண்முகம்

இந்நிலையில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் போட்டியிடும் A.C சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாணியம்பாடி அடுத்தள்ள பூங்குளம் உள்ளிட்ட 16 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , கே. பி அன்பழகன் , காமராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக , திமுக மற்றும் நாம் தமிழர் என மும்முனை போட்டி நிலவு கின்றது.

Categories

Tech |