Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனாவால் காவலர் உயிரிழப்பு… ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

கொரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு சொந்த பணத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில், கலங்காபேரி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அய்யனார்(42) என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளதையடுத்து, ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்குப் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது.

அதனை தொடர்ந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காவலர் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார்.. அங்கு  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜூலை 5ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் தலைமைக் காவலர் அய்யனார் இறந்தார்.. இவரது உருவப்படத்திற்கு உயர் காவல் அதிகாரிகள் மற்றும்  போலீசார் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தனர்.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலர் அய்யனாரின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த பணத்தில் இருந்து குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

Categories

Tech |