விபத்தில் தனது காலை இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
கோவை மாவட்டம் அவினாசி ரோட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று கோல்ட்மின்ஸ் எனும் இடத்தில் சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் ஸ்கூட்டரில் பணிக்கு சென்ற பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் பெண்ணின் பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் ராஜேஸ்வரியின் இடது கால் நசுங்கிய நிலையில் அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை அளிக்கப்பட்டாலும் ராஜேஸ்வரியின் இடது கால் அகற்றப்பட்டது. இதனால் அவர் சக்கர நாற்காலியில் பணியை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை அறிந்த அமைச்சர் வேலுமணி ராஜேஸ்வரியின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.
அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்திலுள்ள சங்கனூர் என்னும் கிராமத்தில் கிராம உதவியாளர் பணிக்கு ராஜேஸ்வரியை நியமித்தார் அமைச்சர் வேலுமணி. அந்த பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் வேலுமணி ராஜேஸ்வரி இடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட ராஜேஸ்வரி ராஜேஸ்வரியின் தாயாரும் அமைச்சருக்கு நன்றி கூறினர்.