Categories
மாநில செய்திகள்

“பிரியா மரணத்துக்கு அமைச்சர் மா.சு பொறுப்பேற்கணும்”…மத்திய அமைச்சர கூட்டிட்டு வந்து பெருசா நடத்துவோம்…. அண்ணாமலை அதிரடி….!!!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர்கள் மீது தற்போது வழக்கு பதியப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்று தமிழகத்தில் எப்போதும் பார்த்ததில்லை. இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் என்றால் அது தமிழகம் தான். ‌ இதில் மாணவிபிரியா உயிரிழந்த மருத்துவமனை முதலமைச்சரின் தொகுதியில் இருப்பது என்பது தான் வேதனையான விஷயம். இது போன்று எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாக கோளாறுகளால் நடைபெறும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் வெளிவருவதில்லை.

அதையெல்லாம் மாநில அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மருத்துவ கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும். அதன் பிறகு மாணவி பிரியாவின் மரணத்தின் நினைவாக சென்னையில் மிகப்பெரிய கால்பந்தாட்ட போட்டியை நடத்துவோம். இதற்கு மத்திய அமைச்சரை அழைத்து வந்து தலைமையேற்க வைப்போம். பிரியாவின் சகோதரர்கள் கால்பந்து விளையாடும் நிலையில் அவர்கள் அடையாளம் காட்டும் 10 பேருக்கு பாஜக சார்பில் ஊக்கத்தொகை வழங்கப் படுவதோடு, அவர்கள் எந்த அகாடமியில் இணைந்து விளையாடினாலும் அதற்குரிய மொத்த செலவையும் பாஜக ஏற்கும்.

இதற்கு காரணம் ஒரு பிரியா இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் போன்று 10 ப்ரியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். மேலும்‌ உத்திரபிரதேச மாநிலத்தை விட தமிழகம் வளர்ந்த மாநிலம் என்று கூறும் அமைச்சர் மா. சுப்பிரமணியனால் இன்று வெட்கி தலை குனிந்து நிற்கிறோம். முதலமைச்சரின் சொந்த தொகுதியில் இது நடைபெற்றுள்ளது என்பதால், அதற்கான முழு  பொறுப்பையும் அவர்கள்தான் ஏற்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |