ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா பேட்டை பகுதியில் சரக்கு மினிவேன் டிரைவர் கோபாலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரூபாவதி ஆரணி என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும்- விக்னேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அதே பகுதியில் இருக்கக்கூடிய கோணிப்பைகள் தைக்கும் கடையின் மாடி படிக்கட்டில் ஏறி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலகிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரகு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.