சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சென்ற 2002-ம் வருடம் வெளியான திரைப்படம் “பாபா”. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொரியாலா, நம்பியார், கவுண்டமணி உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். அன்றைய காலக்கட்டத்தில் படுதோல்வி அடைந்த இந்த படத்தை மீண்டும் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர்.
நேற்று வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் மீண்டும் ரிலீசான பாபா படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டும் சுமார் ரூ. 80 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது.