Categories
உலக செய்திகள்

மீண்டும் இந்திய எல்லையை தாண்டும் நேபாளம்…. கண்டனம் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைப்பு….!!

இந்தியாவின் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் நேபாளம் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவிற்கு உரிமையான லிபுலேக் , கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபகாலமாக நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமன்றி அந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் ஒன்றினை கடந்த மே மாதத்தில் வெளியிட்டிருந்தது. நேபாளத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது.ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும் வரலாற்று பூர்வமாக எத்தகைய ஆதாரங்களும் இல்லாமல் நேபாளம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தே நேபாள பிரதமர் கே.பி.ஒலியும் இந்தியாவிற்கு எதிராக பேசி வருகின்றார். அதனால் இரு நாட்டு உறவுகளிலும் ஏற்பட்டுள்ள பிளவுகள் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் நேபாள நாட்டின் பிம்துத் நகர் பவித்ராகவின் மேயர் சுரேந்திர பிஷ்த் புதிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருக்கிறார். அது என்னவென்றால், இந்தியா மற்றும் நேபாளம் எல்லையில் இருக்கும் சம்பாத் மாவட்டத்தின் குமாவன் என்ற பகுதி நேபாளத்திற்கு உரிமையானது. அந்தப் பகுதியில் பல வருடங்களாக நகர் பலிகாவின் வன சமூக குழு மூலமாக நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் பகுதியில் மர வேலைப்பாடுகள் நிறைந்த கட்டுமானங்கள் நீண்ட காலமாக இருந்திருக்கின்றன. மேலும் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப் பட்டு வந்திருக்கின்றன.இரு நாட்டு அதிகாரிகளும் கூட்டாக நிலஅளவை பணிகளில் ஈடுபட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். எல்லைப் பிரச்சனை இரு நாட்டிற்கும் நல்லதல்ல. மிக விரைவில் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்பாவத் மாவட்டம் தனக்பூர் எல்லைப்பகுதியில் நேபாள நாட்டினர் அத்துமீறி உள்ளே நுழைந்து இருக்கின்றனர். அந்தப் பகுதி பில்லர் நம்பர் 811 என்று கூறப்படும் கைவிடப்பட்ட பகுதியாகும். இருந்தாலும் அதற்கு இந்திய பாதுகாப்பு அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும் இதுதொடர்பாக நேபாள நாட்டு உயர் அதிகாரிகளுடன் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் உடனடியாக அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இரு நாட்டு அதிகாரிகளும் வருகின்ற வாரங்களில் சந்தித்து இந்தப் பிரச்சனை பற்றி ஆலோசனை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |