Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மீன் பிடிக்கச் சென்ற வாலிபர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பட்டி 50 வீடு காலனியில் வசித்து வரும் மீனவர் அந்தோணி ஜெசுலர் தனது சகோதரர் சதீஸ் என்பவருடைய பைபர் படகில் மீன்பிடிக்க சென்றார். இதனையடுத்து அந்தோணி ஜெசுலர் மீன்களைப் பிடித்துக் கொண்டு வெள்ளப்பட்டியில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கடலில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்த வேளையில் நடுக்கடலில் படகில் வந்து கொண்டிருந்த அந்தோணி ஜெசுலர் மீது மின்னல் தாக்கியது. இதனால் படுகாயமடைந்த அந்தோணி ஜெசுலர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்தோணி ஜெசுலர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |