மின் நிலையம் அருகில் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணை மின் நிலையம் மூலம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மின் நிலையம் அருகில் காய்ந்து கிடக்கும் மஞ்சம் புற்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் பற்றி எரிந்த தீ மளமளவென பரவ தொடங்கியது. இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.