சுமார் லட்சக்கணக்கானோர் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலந்து அரசு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து விலகுவது “போலெக்ஸிட்” என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து நாடு வெளியேறினால் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். எனவே இதனை கண்டித்து நூற்றுக்கணக்கான இடங்களில் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போலெக்ஸிட் பயத்திற்கு மத்தியில் அந்நாட்டில் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டள்ளனர்.
இதற்கிடையே தற்போதைய எதிர்க்கட்சி சிவிக் தளத்தின் தலைவரும், ஐரோப்பிய கவுன்சிலின் முன்னாள் தலைவருமான டொனால்ட் டஸ்க் தலைநகர் Warsaw-வில் நடந்த பேரணியில் “ஐரோப்பிய போலந்தை பாதுகாக்க” ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டதை கண்டு திருப்தி அடைந்ததாக கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள தலைவர்கள் போலந்தின் அரசியலமைப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளனர்.