Categories
உலக செய்திகள்

‘அடுத்த ஆண்டு இப்படி இருக்கும்’…. கொரோனா தொற்று குறித்து…. மைக்ரோசாப்ட் நிறுவனர் விளக்கம்….!!

கொரோனா தொற்று அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் விளக்கம் கொடுத்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ்  அடுத்த ஆண்டு கொரோனா தொற்று எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, அடுத்த ஆண்டு பருவகால காய்ச்சலை விட கொரோனா தொற்று பாதிப்பானது குறைவாக இருக்கும். மேலும் அதன் உருமாற்றத்தில் ஏதேனும் புதிய மாறுதல்கள் நடைபெறாத பட்சத்தில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும்  இறப்பு விகிதமானது குறைவாக காணப்படும்.

அதிலும் இயற்கையாக உள்ள நோயெதிர்ப்பு சக்தி, தடுப்பூசியால் ஏற்பட்ட எதிர்ப்பு சக்தி, ஆன்டிபாடிகள் போன்றவற்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். குறிப்பாக இறப்பு விகிதம் மற்றும்  நோய் பரவும் தன்மையானது வியத்தகு முறையில் குறையும். இதற்கான சிறந்த வழி தடுப்பூசிகள் தான்” கூறியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டின் மத்தியில் கொரோனா தொற்றில் இருந்து வெளிவரும்போது தடுப்பூசி விநியோகத்திற்கான தடைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |