Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS PBKS : மாஸ் காட்டிய ஹர்திக்  பாண்டியா ….! பஞ்சாபை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்  குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கிராம் 42 ரன்கள் குவித்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா மற்றும் பொலார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்பிறகு களமிறங்கிய மும்பை அணி 134 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார் .

இதனால் 16 ரன்னுக்குள் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு களமிறங்கிய         டி காக் , சவுரப் திவாரியுடன்  ஜோடி சேர்ந்தார் . இருவரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர் .இதில் திரிபாதி 45 ரன்னும், டி காக் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக்  பாண்டியா உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக மும்பை அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது .இதில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 40 ரன்னுடன்  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Categories

Tech |