“எம்ஜிஆர் மகன்” படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “எம்ஜிஆர் மகன்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அந்தோணி தாஸ் இசையமைத்துள்ளார்.மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் “எம்ஜிஆர் மகன்” படத்தின் இசையை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.